அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் இன்று கௌரவிக்கப்படவுள்ளார் !

அபு அலா 

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவும்ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்விலும் பல்துறை சேவகர் ஊடகவியலாளர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

riyas

இன்று வெள்ளிக்கிழமை (25) மாலை மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் 24 ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான எம்.சீ.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், கே.கோடிஸ்வரன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களென பலர் கலந்துகெள்வர்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலையிலும்இடைநிலைக் கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும்உயர் கல்வியை கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையிலும் கற்றுள்ளார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணக்கியலும், நிதியியலும் பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமாவையும் கற்றுள்ள இவர் ஊடகத்துறையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சுதந்திர ஊடகவியலாளராக சேவையாற்றி வருகின்றார்.

அத்துடன் மாவட்ட சமாதான நீதவான இவர் அம்பாறை மாவட்டத்தில் பல நிறுவனங்களிலும், சமூக அமைப்புக்களிலும் பல பதவிகள் பகித்து சமூகத்துக்கு தொண்டாற்றிவரும் இவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் பிரத்தியேக ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மர்ஹூம் வித்தியாநிதி டாக்டர் எம்.பி.பி.எம்.இஸ்மாயில் அவ்வாஉம்மா தம்பதிகளின் 4 வது புதல்வராவார்