எம்.ஐ.எம்.றியாஸ், அபு அலா
மத்திய சுகாதார அமைச்சிலிருந்து கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் சுமார் 141 மில்லியனுக்கான வேலைத்திட்டங்கள் இதுவரையும் ஆரம்பிக்கப்பட்டவில்லை. இது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் கடமையாற்றும் அதிகாரிகளின் கவயீனமே தவிற வேறு வெரு எதுவும் கூறமுடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுகீட்டின் மீதான குழுநிலை விவாதம் நேற்றிரவு (23) பிரதி தவிசாளர் என்.இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றபோது இதில் ஆளும்கட்சி சார்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் சுகாதார அமைச்சின் பொறுப்புக்களை மிக குறுகிய காலத்தில் பாரமெடுத்து சிறந்த முறையில் இவ்வமைச்சின் பணிகளை முன்னெடுத்து வருவது பாராட்டக்கூடிய விடயமாகும். இருப்பினும் இவ்வமைச்சில் கடமையாற்றும் உயரதிகளின் நிருவாகத்திறமையின்மை காரணமாக குறிப்பிட்ட தொகைப் பணம் வைத்தியசாலைகளின் பௌதீக வளம் மற்றும் மருத்துவ உகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணங்கள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையிட்டு கவலையடைகின்றேன்.
குறிப்பிட்ட விடயங்களுக்கு சுகாதார அமைச்சர் பொறுப்பல்ல. அமைச்சின் அதிகாரிகளே இதற்கு பொறுப்புக்கூறவேண்டும். சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பீ.ஜீ.மஹிபாலவினால் அனுப்பிவைக்கப்பட்ட 2015.06.10 ஆம் திகதிய பி01/02/2015 ஆம் திகதிய கடித்த்தின் பிரகாரம் உட்கட்டமைப்பு மற்றும் திருத்த வேலைகளுக்காக கிண்ணியா மற்றும் மூதூர் ஆதார வைத்தியசாலைகளுக்கு 60 மில்லியன் பண ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு இவ்வேலைத்திட்டங்கள் இதுவரையும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தி வைத்தமைக்கான காரணம் என்ன?
ஜெயிக்கா திட்டத்தின் கீழ் களுவாஞ்சிக்குடி ஆதரா வைத்தியசாலைக்கென 300 மில்லியன் ரூபா பண ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டங்கள் நிறைந்துள்ளது. ஆனால் 60 மில்லியன் ரூபாவுக்காக வேலைத்திட்டம் நிறைவேறவில்லை. ஆகவே அமைச்சின் உயரதிகாரிகளின் திறனற்ற செயற்பாடுகளே இதற்குக் காரணம்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியவசியத் தேவையாக மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 மில்லியனுக்கான கொள்வனவு செய்வதற்கான ஆவகங்கள் இதுவரையும் சமர்ப்பித்து அதற்கான வேலைத்திட்டங்களை நிறைவு செய்யவில்லை. இதனால் இத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன?
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், உயர்தர கருவிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 51 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. இதன் காலம் 2015.12.14 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இப்பணத்தினை இனி ஒருபோதும் பெறமுடியாது இதற்குக் காரணம் என்ன?
மேலும் மாகாண நிதியின் PSDG திட்டத்தின் மூலம் 20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண பயிற்சி நிலையம் நிரமானிப்பாதற்காக ஒதுக்கப்பட்ட பணம் இதுவரையும் இவ்வேலைத்திட்டத்துக்கான மதிப்பீட்டு அறிக்கைகூட செய்யப்படவில்லை இதற்கான காரணம் என்ன?
இதற்கு நான் முழு மொத்தமாகக் கூறுவதாயின் இவ்வமைச்சில் கடமையாற்றும் உயரதிகாரிகள் சிறந்த முறையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றாமையே காரணம் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று உரைநிகழ்த்தினார்.