(வீடியோ) சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து , 25 பேர் பலி 100 பேர் படுகாயம் !

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

Fire_071107

இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய இராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

மேலும், தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்தானது, மருத்துவமனையின் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த தளத்தில், அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த தீ விபத்து குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

_87368761_87368760

_87368766_030685391-1

_87368775_030685387-1