பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீர்மானமொன்று கிடையாது !

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீர்மானமொன்று கிடையாது என பாராளுமன்ற சீர்த்திருத்தம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
gayantha

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு அதிகரிக்க பாராளுமன்ற செயற்குழு தீர்மானித்துள்ளதாக எழுந்த கருத்து குறித்து கொழும்பிலுள்ள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

சபை அமர்வுகளில் பங்கேற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒருநாள் பிரவேசத்திற்காக வழங்கப்படும் கொடுப்பனவு 500 ரூபாவிலிருந்து 20000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.