நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாங்கள் இந்நாட்டுக்கு அழைத்து வந்த முதலீட்டாளர்களை திருடர்கள் என்று ஐக்கிய தேசியக்கட்சியினர் அன்று கிண்டல் செய்தனர்.
ஆனால் இன்று அவர்கள் உலகின் முன்னணி திருட்டுப்பேர்வழிகளை இந்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது சோரஸ் எனப்படும் செல்வந்தரை அழைத்து வந்து இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள வைக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெருமையடித்துக் கொண்டுள்ளார்.
ஆனால் அந்த நபர்தான் ஐரோப்பாவில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களிடம் மறைத்துவிட்டது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.