இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச்சென்றார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கியதும் ரஷ்ய வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச்செய்து வரவேற்பு அளித்தனர். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்பட்டதை கவனிக்காத பிரதமர் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த அதிகாரிகள் ஓடிச்சென்று பிரதமரை தடுத்து நிறுத்தி நிலைமையை எடுத்துக்கூறினார்.
உடனே சுதாரித்துக்கொண்ட பிரதமர் திரும்பி வந்து தேசிய கீதம் இசைத்து முடிக்கும் வரை அசையாமல் நின்று மரியாதை செலுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு லேசான சலசலப்பு ஏற்பட்டது.
அண்மையில் ஆசியான் மாநாட்டின் போது, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்துப் பேசிய போது, இந்தியாவின் கொடி தலைகீழாக இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.