கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு சில மருந்தகங்களில் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்- பிரதியமைச்சர் அமீர் அலி

 

பழுலுல்லாஹ் பர்ஹான்

 ‘கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு சில மருந்தகங்களில் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு வித்துக் கொண்டு இருக்கிறார்கள்’ என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.

DSC_0117

ஒட்டமாவடி மீராவோடை கிட்சி கிண்ட காடன் ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் 1வது வருட மாணவர் வெளியேறும் விழா அண்மையில் ஒட்டமாவடி மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

‘கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற இளைஞர்கள், சின்னஞ் சிரிசுகள் எல்லாம் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி, எமது சமூகத்தை கல்வியில் இருந்து சீரழிப்பதற்கும் உங்களில் இருந்து உங்களுடைய பிள்ளைகளை பிரிப்பதற்குமாக ஒரு சில வியாபாரிகள் கல்குடா பிரதேசத்தில் கங்கனம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

எங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, ‘பணம் சம்பாதித்தால் போதும்’ என்ற அலவிலே எமது பிரதேசத்தில் ஒரு சில மருந்தகங்கள் பிழையான மருந்து விற்பனைகளை செய்கிறார்கள்.

ஒரு சில மருந்தகங்கள் ஒரு நாளைக்கு முப்பது நாயிரம் இலாபம் ஈட்டக் கூடிய போதை மாத்திரைகளை பாடசாலை பிள்ளைகளுக்கு வித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்கின்ற விடயத்தையும் உங்களுக்கு சொல்ல வேண்டும். 

உங்கள் பிள்ளைகளின் எல்லா நிலவரங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக.

அது போலதான் எல்லா விடயங்களிலும் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருந்தால் மாத்திரம்தான் எங்களுடைய பிள்ளையின் எதிர்காலத்திலே ஓர் அளவுக்காவது நாங்கள் காப்பாற்றி எடுக்க முடியும் என்று நாங்கள்; நம்புகின்றோம்.

அவசரப்பட்ட சமூகம், அவசரப்பட்ட சூழல், இருண்ட வாழ்கையோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் நாங்கள் எல்லாவற்றையும் கடந்து விடுவோமா என்கின்ற ஒரு கவனத்திலும், ஒரு கவன இருப்பிலும் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்ற பொழுது இருக்கின்ற எங்களுடைய குழந்தை செல்ங்களையாவது ஓரளவு காப்பாற்றி எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கின்றது என்பதிலே நான் உடன்பாடு கண்டிருக்கின்றேன்.

எனவேதான் எதிர்வருகின்ற காலங்களிலே உங்களுடைய பிள்ளைகளின் கல்வியிலே அதிக அக்கறை எடுங்கள், உங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கையில் அதிகம் அதிகம் கண்னோட்டத்தோடு இருங்கள். ஆனால் அவர்கள் சந்தேகப்படும் விதமாக நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள்.

அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு நல்ல ஆசானாக, தோழனாக, தோழியாக இருந்து ஆலோசனை செய்கின்ற ஒருவராக நீங்கள் உங்களை அதிகம் அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்த இடத்திலே நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அது மாத்திரம் அல்லாமல் எமது பிரதேசத்தில் இருக்கின்ற ஆரம்ப பாடசாலைகள் நடாத்துகின்ற ஆசிரியைகள் மிகுந்த கஷ்டத்தோடும், சுமையோடும், தியாகத்தோடும் இந்தப் பணிகளை செய்கிறார்கள் என்பதிலே தாய்மார்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வேண்டுகொள் விடுக்கின்றேன்.

அவர்களோடு உங்களுடைய பிள்ளைகளை பாரத்துக் கொள்ளுகின்ற அந்த கைங்கரியத்திற்கு நீங்கள் மாதாந்தம் செய்கின்ற அந்த சன்மானம் போதாது என்பதிலே நான் உடன்பாடுகின்றேன்.

ஆனால் எனக்கு ஒரு உடன்பாடு இருக்கின்றது எதிர்வருகின்ற காலங்களிலே பிரதேச சபைத் தேர்தல் ஒன்று வர இருக்கின்றது.

அதிலே 25 வீதமானவர்களை பெண்கள் பட்டியலிலே கட்டாயம் போட வேண்டுமென்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்திருக்கின்றது. நான் தேடிப் பார்தேன் எப்படிப்பட்ட பெண்களை போடலாம் என்று சொன்னால் பாலர் பாடசாலை ஆசிரியைகள்தான் அதற்கு சாதகமாக இருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால் அவ்வளவு பொறுமையோடு என்னைவிடவும் ஏச்சு வாங்குகின்ற, பேச்சு வாங்குகின்ற ஒரு தொகுயினர் இருப்பார்கள் என்றால் இந்தப் பிரதேசத்திலே அவர்கள் முன்பள்ளி ஆரியைகள் தவிர வேறு ஒருவரும் இருக்க மாட்டார்கள்’ என்றார் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி.