திருமலை மாவட்டத்தின் காணிகளை வன விலங்குத் திணைக்களம் கபளிகரம் செய்கின்றது : ஜே.எம்.லாஹிர் !

எப்.முபாரக்  

 

                 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய மக்கள் குடியிருப்பு இல்லாத சில காணிகளை வன விலங்குத் திணைக்களம் கபளிகரம் செய்து தமது ஆதிக்கத்தை காட்டி வருவதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.

 

 கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய் கிழமை(22)கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது.        கிழக்கு காணி அபிவிருத்தி,வீதி அபிவிருத்தி மகளிர் விவகார,நீர்வழங்கள் வடிகாலப்பு மனித வழு அமைச்சிக்கான வரவு செலவுத் திட்ட 2016 ஆம் ஆண்டு ஒதுக்கீடுகளுக்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.                

 

 அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

lahir

   கிழக்கு மாகாணத்தின் காணி அதிகாரத்தினை மத்திய அரசு உத்தியோக பூர்வமாக தராத போதிலும் நாம் சும்மா இருந்து விட முடியாது.காணி விடயம் மாகாணத்தின் மிக முக்கியமான துரையாகும் கிழக்கு மாகாணத்தின் நாலா பக்கங்களிலும் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் சூரையாடப்படுவதாக தகவல் கிடைக்கின்றது அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.கிழக்கின் காணி அமைச்சிக்கான முத்திரை திட்டத்தினை மீளப்புச் செய்து திருத்தியமைக்கப்பட வேண்டும் திருகோணமலை மாவட்டத்தில் நில அளவை அமைப்பு படத்தினை மீளக்கப்பட்டு சிறந்த காணித் திட்டங்களை காணி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.  

 

                திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தோப்பூர் போன்ற பகுதிகளில் வீதிகளின் நிலை பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.மூதூர் துரைமுக வீதி,மற்றும் மூதூர் வேதத்தீவு பகுதிக்கான படகுச் சேவையை சீர்படுத்தப்பட வேண்டும் அதேவேளை மத்ரஸா வீதி, மூதூர் நெய்தல் நகருக்கான வீதிகளையும் மீளமைத்து அபிவிருத்தி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.