பி. முஹாஜிரீன்
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 4வது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (22) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் ‘பல்துறைசார் ஆய்வு மற்றும் பயிற்சியில் வெளிப்படையான போக்கு’ எனும் தொனிப் பொருளிலான தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை ஆய்வு அமர்வு ‘சீயோர்ஸ் – 2015’ எனும் தலைப்பிலான ஆய்வு மாநாடு பீடாதிபதி ஏ.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும் கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் சிறி ஹெற்றிகே பிரதம பேச்சாளராகவும் கலந்த கொண்டனர்.
இம்மாநாட்டில் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், பீடாதிபதிகள், தணைக்களத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேராசிரியர் சிறி ஹெற்றிகே, உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் அய்வப் பத்திரங்களைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.