நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் தீவிரவாத குழுவான போகோ ஹராம் தாக்குதலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என ஐ.நா. சபை கூறியுள்ளது.
ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நைஜீரியாவிலும், கேமரூன், சாட் மற்றும் நைஜர் போன்ற அண்டைய நாடுகளிலும் போகோ ஹராம் தீவிரவாதிகள் பயங்கர வன்முறையில் ஈடுப்பட்டுவருகின்றனர். இவர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால் சுமார் 2000 பள்ளிகள் மூடப்பட்டு 10 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோ ஹராம் தீவிரவாதிகள் மேற்கத்திய கல்வி பாவகரமானது என்ற கொள்கை உடையவர்கள். இதனால் பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறார்கள். செயல்படும் சில பள்ளிகளிலும் அதிகமான மாணவர்கள் காரணமாக கடுமையான நெருக்கடி நிலவுகிறது.
இதுவரை போகோஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.