பிரான்சில் அகதிகளுக்காக கன்டெய்னர் குடியிருப்புகளை அமைத்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் 1500 பேரை குடியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.பிரான்சில் Jungle camp என அறியப்படும் Calais பகுதியில் உள்ள அகதிகளுக்கு கன்டெய்னர் குடியிருப்புகளை அமைத்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆயிரத்து 500 அகதிகளை புது கிடியிருப்புக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளனர்.
சரக்கு கப்பல்களில் பயன்படுத்தும் இந்த கன்டெய்னர்கள் குடியிருப்புகள் அகதிகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குளிர்காலம் என்பதால் பெரும்பாலான அகதிகள் தற்போதுள்ள முகாம்களில் போதிய வசதிகள் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,
அரசு இந்த புது முயற்சியை முன்னெடுத்துள்ளது, இது கடுமையான வானிலையில் இருந்து அகதிகளை காக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து ஏழ்மை காரணமாக புலம்பெயர்ந்த சுமார் 4,500 பேர் Calais பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான அகதிகள் சிறு சிறு கூடாரங்களில் வசித்து வருவதினால் மோசமான வானிலை காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
|