வீடியோ – ரிசாத் பதியுதீன் அன்று மகிந்தவை விட்டு வெளியேறிய அன்றைய நாள் இன்றாகும் !

 
 
ஏ.எச்.எம்.பூமுதீன்
 
dd-2
 
இலங்கையின் ஜனாதிபதி ஹிட்லர் என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து கவுக்கப்படுவதற்கு ஆரம்பநாளாக இன்றைய நாள் கருதப்படுகின்றது.
 
எவராலுமே அசைக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை அசைக்க முடியுமென நிருபித்துக்காட்டிய நாளாகவும் இந்த நாள் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகின்றது.
 
2005 இல் ஜனாதிபதியாக ஆட்சிய பீடமேறிய மகிந்த ராஜபக்ச 30 வருட யுத்தத்தை ஒழித்து 2010 இல் மீண்டும் இரண்டாவது முறை ஜனாதிபதியாகின்றார். சிங்கள மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த மகிந்த ராஜபக்சவின் 2012ம் ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலம் இருள் சூழ்ந்ததாக மாறியது.
 
முஸ்லிம் சமுகத்தின் மீது கைவைத்ததே அவரது ஆட்சியில் இருள் சூழ்வதற்கு காரணமாக அமைந்தது. அசைக்க முடியாத மனிதர் என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை அசைக்க முடியும் என முதலில் நிரூபித்துக்காட்டிய சிறுபான்மை இன தலைவராக அமைச்சர் ரிசாத் பதியுதீனே திகழ்ந்தார் என்பது மறுபக்கம் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.
 
முஸ்லிம் சமுகத்தின் மீது கைவைத்து முஸ்லிம் சமுகம் அச்சத்தில் வாழ்ந்த போது வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருக்காது. மகிந்தவை வீழ்த்தி ஆட்சி மாற்றத்திற்கு முதலில் வித்திட்ட மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரிசாத் பதியுதீனை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
 
2005 இல் மற்றும் 2010இல் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதாரவைப் பெற்ற கட்சியாக அப்போது திகழ்ந்த முஸ்லிம் காங்கிரஸ் அன்று ரணிலையும் பொன்சேகாவையும் ஆதரித்த போது ரிசாத் தட்டத்தணியாக நின்று மகிந்தவின் வெற்றிக்கு உறுதுiணாக நின்று தனது சிறு அரசியல் அனுபத்தின் ஊடாக தனக்கு இருந்த அரசியல் சாணக்கியத்தை நிரூபித்துக் காட்டினார்.
rizad
 
அதே ரிசாத் பதியுதீன்தான் இந்த மகிந்தவை வீழ்த்துவதற்கும் முதல் கால்கோளாக திகழ்ந்தார். அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்து விட்டு எதிர்க்கட்சி அரசியல் செய்யும் சாணக்கியம் முகா தலைவருக்கு மாத்திரமே உண்டு என வர்ணித்த முகா போராளிகள் இன்றைய நாள் போல் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில் ரிசாத் அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்து முஸ்லிம் சமுகத்திற்காக மகிந்தவை விட்டு வெளியேறிய போது இதே முகா போராளிகள் திகைத்து நின்ற நாள் இந்நாளாகும்.
 
ரணிலின் ஆட்சியை வீழ்த்த சந்திரிக்காவுடன் இணைந்ததன் போலல்லாது அதன் பிற்பாடு சந்திரிக்காவின் ஆட்சியை வீழ்த்த ரணிலுடன் இணைந்தது போலல்லாது  ரிசாதின் இந்த அதிரடி வெளியேற்றம் முஸ்லிம் சமுகத்தின் கௌரவத்திற்கும் நிம்மதியான வாழ்வுக்குமான வெளியேறலாகவே முஸ்லிம் சமுகத்தால் அன்று பார்க்கப்படுகின்றது.
 
உயிரை துச்சமென மதித்து மகிந்தவின் அடுத்த கட்டம் எவ்வாறு இருக்குமோ என்பது கூட தெரியாத சூழ்நிலையில் மிகவும் அச்சமும் பரபரப்பும் நிறைந்த வேளையில் தான் ரிசாத் பதியுதீன் இந்த நல்லாட்சியை நிறுவ வெளியேறினார்.
 
டிசம்பர் 22 என்பது ரிசாத் பதியுதீனை பொறுத்தவரையில் உயிரை துச்சமென மதித்த நாள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 
இலங்கையின் அமைச்சரவையில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் கைத்தொழில் வாணிப அமைச்சு என்னும் பலம் பொருந்திய அமைசையும்  அதனூடாக தான் சார்ந்த சமுகத்திற்கு செய்த செய்ய எண்ணியிருந்த அத்தனையும் தூக்கி எறிந்து விட்டு தனது அ.இ.ம.கா என்னும் கட்சி இரண்டு துண்டாக உடைக்கப்படும் என்று அறிந்திருந்தும் கூட இதை எல்லாவற்றையும் விட முஸ்லிம் சமுகத்தின் நிம்மதியும் கௌரவுமே முக்கியம் என கருதி வெளியேறிய நாள் இந்த டிசம்பர் 22 ஆகும்.
 
ரிசாத் பதியுதீன் அன்று மகிந்தவை விட்டு வெளியேறிய அன்றைய நாள் முஸ்லிம் சமுகத்தைப் பொறுத்த வரை ஒரு பொன்நாளாகும் சமுகத்தின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து ரிசாத் பதியுதீன் முதலில் வெளியேறிய போது நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களும் கூட அன்றைய தினத்தை ஒரு பெருநாளாகவே கொண்டாடினர். அதற்கு அந்த மக்கள் அளித்த பரிசுதான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ரிசாத் பதியுதீனுக்கும் அவரது கட்சிக்கும் ஐந்து ஆசனங்களை வழங்கியது என்பது.
 
அதில் மற்றுமொரு பரிசுதான் அம்பாறை மாவட்ட மக்கள் 33 ஆயிரம் வாக்குகளை அளித்ததும் குருணாகல் மவாட்ட மக்கள் 53 ஆயிரம் வாக்குகளை அளித்ததுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் சமுகம் வழங்கிய அந்த ஐந்து எம்பிக்களில் ஒன்று அனுராதபுரம் மாவட்டத்திலிருந்தாகும். 
அனுராதபுர முஸ்லிம்களின் அரசியலில் நினைத்துக் கூட பார்த்திராத அளவில் முதல் தடiவாய முஸ்லிம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகின்ற வரலாற்றையும் ரிசாத் பதியுதீனின் அன்றைய வெளியேற்றம் ஏற்படுத்திக்கொடுத்தது. 
 
டிசம்பர் 22 என்பது – முகா ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபுக்கு பின் முஸ்லிம் சமுகத்திற்காக உண்மையாக பாடுபடும் ஒரு தலைவனை இனம் காட்டிய நாளுமாகும்.