நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து அரச மருத்துவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மருத்துவர்களுக்கான தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யும் நிதியமைச்சின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு மருத்துவர் சங்க முக்கியஸ்தர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை காலமும் மருத்துவர்கள் அனுபவித்த சலுகையான தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.