அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்து எங்களை பயம்காட்ட முயற்சிக்க கூடாது : கெஜ்ரிவால் !

அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்து எங்களை பயம்காட்ட முயற்சிக்க கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவுள்ளார். 

kejriwal-main1

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக, டெல்லி மாநில தலைமை செயலகத்தில் கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசை சாடிய கெஜ்ரிவால் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது பல்வேறு முறைகேடுகள் நடந்தது, அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஜெட்லியை காப்பாற்றவே இந்த சோதனை நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். 

பாரதீய ஜனதா இதனை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்க மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. டெல்லி பாராளுமன்றத்திலும் ஜெட்லி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. 

குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் அருண்ஜெட்லி, கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள், தலைமை செயலகத்தில் நடந்த சி.பி.ஐ. சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை தொடர் ஒன்றையும் நாளை நடத்த முடிவு செய்யப்பட்டது என்றும் கெஜ்ரிவால் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார். 

மேலும் அவர், ”வழக்கு தொடர்வதன் மூலம் அருண் ஜெட்லி எங்களை பயம்காட்ட முடியாது. ஊழலுக்கு எதிராக எங்களுடைய போராட்டமானது தொடரும். ஜெட்லி நீங்கள் விசாரணை குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் மற்றும் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறிவுள்ளார்.