கிழக்கு மாகாண கல்விக்கான நிதி குறைவாக உள்ளது : சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்

எப்.முபாரக்                      

 

கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கான நிதி மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது இது கவலைக்குறிய விடயமாகும் அத்தோடு பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.         கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்துக்கான மாகாண சபை அமர்வு இன்று திங்கட்கிழமை (21)தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் நடைபெற்ற போதே அவர் அதனைத் தொரிவித்தார்.                              FB_IMG_1441378476068     

 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

கிழக்கு மாகாணத்தின் பதினேழு கல்வி வலயங்களில் மூதூர் மற்றும் கல்குடா கல்வி வலயங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இயங்கி வருகின்றது அத்தோடு இவ்வலயங்களில் 83மற்றும் 88பாடசாலைகள் இயங்கி வருகின்றது. இவ்வாறான கல்வி வலயங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி குறைவாகவே காணப்படுகின்றது.                            

 

அத்தோடு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் மழை காலங்களில் சில பாடசாலைகள் வெள்ள நீரிலே காணப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது இது சீர்படுத்தப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் முப்பது பாடசாலைகள் தற்காலிக கொட்டில்களில் இயங்கி வருகின்றது பதின் மூன்று பாடசாலைகள் வகுப்பறைகள் இன்றி இயங்கி வருகின்றது இதனை மேம்படுத்த வேண்டும்.    திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் சாஹிரா வித்தியாலயம், கந்தளாய் பேராற்று வெளி முஸ்லிம் வித்தியாலம், குச்சவெளி அந்நூர் மகா வித்தியாலயம்,திருகோணமலை ஜமாலியா,சாகிரா மகா வித்தியாலம் போன்ற பாடசாலைகள் பாரிய வளப்குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றது இதனை கல்வி அமைச்சர் கவனத்தில் எடுத்து சீர்செய்ய வேண்டும்.                       

 

திருகோணமலை மாவட்டத்தில் வேறு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் போது மூன்று மாதங்களுள் இடமாற்றம் பெற்று சொந்த இடங்களுக்கு செல்கின்றார்கள் இது கவலைக்குறிய விடயமாகும். நியமனம் செய்யப்படுகின்ற போது உரிய மாவட்டங்களில் உள்ளவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றார்.