தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

 

நிஸ்மி

 

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியின் அருகில் நெருக்கமான மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் அல்-பாத்திமியா வித்தியாலத்தின் அருகில் அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை நிறுத்துமாறு கோரி நேற்று (19) சனிக்கிழமை காலை பிரதேசத்தில் வாழும் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும்;; ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC05661_Fotor

இத் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வெளியேறும் கதிர்களினால் மக்களுக்கு புற்று நோய், குறைப் பிரசவம், அங்கயீனமுள்ள குழந்தைகள் பிறப்பு, மூளைப் புற்று நோய், தோல் நோய்கள் போன்ற பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் உள்ளதனால் கோபுரம் அமைக்கும் வேலைகளை உடன் நிறுத்துமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC05683_Fotor

 

சுத்திகரிக்கப்படாது டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடமாகக் கிடக்கும் குடியிருபபுக் காணியை சுத்திகரிக்கக்கோரி மகஜர் அனுப்புவதற்கெனக் கூறியே எம்மிடம் வெள்ளைப் பேப்பரில் பிரதேச மக்களிடம் ஒப்பங்கள் பெறப்பட்டு அதனை தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை அமைப்பதற்கான விருப்பமாகக் கூறியே இது அமைக்கப்படுவதாகவும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றும் உரிய அதிகாரிகள் தலையிட்டு இதனை நிறுத்தி எமக்கு உதவ வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.