நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் வரும் தேசிய லொத்தர் சபையின் தலைவராக அமைச்சரின் மைத்துனர் ரொமேஸ் ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கருணாநாயக்கவின் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரராவார் என கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
ஏற்கனவே கருணாநாயக்கவினால் மைத்துனர்களில் ஒருவரான பங்ஷா ஜாயா இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன முகாமைப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, மற்றொரு மைத்துனரான கிஹான் மலலசேகரவை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பிரித்தானியாவுக்கான விற்பனை முகாமையாளராக நியமிக்க கருணாநாயக்க எடுத்திருந்த முடிவு தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட குடும்ப உறவு பதவி முறையிலான நியமிப்புக்கள் இந்த ஆட்சியிலும் ஒரு சில அமைச்சர்களால் தொடர்ந்தும் அச்சுப்பிசகாமல் மேற்கொள்ளப்படுவதானது நல்லாட்சியின் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைகின்றது என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.