தாஜூடின் மரணம் குறித்து உண்மைகளை ராஜபக்ச அரசாங்கம் மூடி மறைத்ததாக என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் கைகளில் இரத்தம் தோயவில்லை எனவே நாம் எதனையும் மூடி மறைக்க வேண்டியதில்லை.
சட்ட வைத்திய அதிகாரிகளின் இரண்டு அறிக்கைகள் காணப்பட்டால் அது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவு போன்றவற்றின் நம்பகத் தன்மை குறித்தும் யாரேனும் கேள்வி எழுப்ப முடியும்.
இந்த பிரிவுகள் முழுக்க முழுக்க அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்படும் போதே தீர்ப்பு எழுதப்பட்டே அழைக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் விசாரணை நடத்திய சில அதிகாரிகள் இந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.
இதனால் விடயங்கள் மூடி மறைக்கப்பட்டதாக எவராலும் குற்றம் சுமத்த முடியாது.
யார் கப்டன் திஸ்ஸ? அவ்வாறான பெயரை உடைய எவரையும் எனக்குத் தெரியாது.
தாஜூடின் கொலை தொடர்பில் கப்டன் திஸ்ஸ என்பவரை சந்தேகிப்பதாக எனக்குத் தெரியாது.
எனவே அவ்வாறான ஓர் நிலையில் அது பற்றி கருத்து வெளியிட முடியாது.
பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர முடியும்.
நான் இணையத்தளங்கள் மற்றும் செய்தித் தாள்களிலேயே இது பற்றிய செய்திகளை அறிகி;ன்றேன் என நாமல் ராஜபக்ச குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.