பிரித்தானிய குட்டி இளவரசர் ” மொண்டேர்சூரி ” செல்ல தயார் !

பிரித்தானிய குட்டி இளவரசரான ஜோர்ஜ் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மழலையர் (மொண்டேர்சூரி) பள்ளிக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமான அரண்மனை தகவல்கள் வெளியாகியுள்ளது.

prince-george

குட்டி இளவரசி சார்லோட் தனது முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள தருணத்தில், இளவரசர் வில்லியம், அவருடைய மனைவி கேட் மிடில்டன், ஜோர்ஜ் மற்றும் சார்லோட்டின் குடும்ப புகைப்படத்தை நேற்று அரண்மனை வெளியிட்டது.

இந்த புகைப்படம் வெளியானதன் தொடர்ச்சியாக இன்று அரண்மனை புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில், ‘எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் ஜோர்ஜ் மழலையர் பள்ளிக்கு அனுப்பப்படுவார் என்றும், வாரத்தில் சில நாட்கள் மட்டும் பள்ளியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டரை வயதை எட்டியுள்ள ஜோர்ஜ், இளவரசி கேட் மிடில்டன் Norfolk மாளிகைக்கு அருகே உள்ள Westacre Montessori School என்ற பள்ளிக்கு அனுப்பப்படுவார்.

article-3365466-2F7C576F00000578-788_964x439

இந்த பள்ளிக்கு செல்லும் வழியானது ஒரு பொதுச்சாலை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட இளவரசர் வில்லியம், ‘ஒரு தந்தை என்ற அடிப்படையில் ஜோர்ஜின் கல்வி மீது மிகுந்த அக்கறை உள்ளது.

அதே சமயம், பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் ஜோர்ஜின் தனி அந்தரங்கத்திற்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குட்டி இளவரசர் பள்ளிக்கு வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் பள்ளி நிர்வாகமும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‘குட்டி இளவரசரை வரவேற்க தயாராக இருக்கிறோம். பிற குழந்தைகளுக்கு தனி அக்கறையுடன் கல்வி கற்பிப்பதை போல் இளவரசர் மீதும் தனி அக்கறை செலுத்துவோம்’ என தெரிவித்துள்ளனர்.

Westacre_Montessor_3530037b