பாரீஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு 300 மில்லியன் யூரோ இழப்பீடு !

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு சுமார் 300 மில்லியன் யூரோ இழப்பீடு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினருக்கு அரசு இழப்பீட்டு தொகையை அறிவித்துள்ளது.

_86800302_paris1

இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு சட்ட அமைச்சரான Christiane Taubira வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினருக்கு அளிக்கவுள்ள ஒட்டுமொத்தம தொகை 300 மில்லியன் யூரோவை எட்டும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 6.7 மில்லியன் யூரோ வரை இழப்பீடு வழங்கி வருவதாகவும், இதுவரை 10 முதல் 20 மில்லியன் வரை இழப்பீடு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த குடும்பத்தினருக்கு சுமார் 7,71,000 யூரோ வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இழப்பீடு பெறுவது தொடர்பாக, அல்லது இழப்பீடு குறித்து தகவலை பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளதாகவும் இதுவரை சுமார் 11,000 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை பேரிடர், தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 20 வருடங்களுக்கு முன்னர் அரசு உருவாக்கிய நிதி அமைப்பில் இருந்து இந்த இழப்பீட்டு தொகையை வழங்கி வருவதாக சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.