அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம் !

Dullas

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் காரணமாகவே வரவு செலவுத்திட்டத்தில் சிறிதளவேனும் நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எனவே இதன் காரணமாகவே வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்துக்கு 157 வாக்குகளே கிடைத்ததாக அவர் குறி்பிட்டுள்ளார்.  

எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்திருக்கும் பட்சத்தில் 209 வாக்குகள் கிடைத்திருக்கும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில் அவ்வாறு நடைபெற்றிருந்தால் அரசாங்கம் தற்போது வெளிக்காட்டும் நெகிழ்வுப் போக்குடன் வரவு செலவுத்திட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்காது என கூறிய அவர் அரசாங்கத்தின் நெகிழ்வுப் போக்கு, ஜனநாயகத்தையும் காணக்கிடைத்திருக்காது எனவும் கூறியுள்ளார். 

அத்துடன் இந்த வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிடம் போதுமான பலம் இல்லை என டளஸ் அகப்பெரும தெரிவித்துள்ளார். 

எனினும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரானவர்கள் என்ற வகையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை வாக்களித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை நாடாளுமன்றத்திற்கு வெளியில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் தாம் உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.