கத்தார் நாட்டை சேர்ந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களுடைய உதவியாளர்களும் 27 பேர் அங்குள்ள சமாவா பகுதியில் பறவை வேட்டைக்கு சென்றனர். இந்த இடம் ஈராக் – சவுதி அரேபியா எல்லையை யொட்டி அமைந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக ஈராக் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் சென்றனர்.
அவர்கள் வேட்டையாடிக் கொண்டு இருந்த போது வாகனங்களில் துப்பாக்கியுடன் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஈராக் ராணுவ வீரர்கள் 2 பேரை மட்டும் விட்டு விட்டு மற்ற 27 பேரையும் கடத்தி சென்றனர். அவர்கள் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. அவர்களை கடத்தியவர்கள் யார் என்றும் தெரியவில்லை. அந்த பகுதியில் கத்தார் மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடத்தியவர்கள் ஏதேனும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.