டோனிக்கு சவால் விடும் ஜடேஜா!

4-R.A.-Jadeja

சென்னை சூப்பர் அணிக்காக விளையாடிய டோனி புனே அணிக்கும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ராஜ்கோட் அணிக்கும் ஒப்பந்தமாகியுள்ளனர். அடுத்த சீசனில் டோனியை நேருக்கு நேர் எதிர்கொள்ள இருப்பது குறித்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ட போது, ‘டோனிக்கு பந்து வீசுவது மிகப்பெரிய சவால். அதுவும் குறுகிய நேர கிரிக்கெட்டில் அவரை கட்டுப்படுத்துவது கடினம். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர் என்பதை டோனி நிரூபித்துள்ளார். 

ஆனால் அவருக்கு எதிராக எனது முழு திறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார். ஜடேஜா மேலும் கூறுகையில், ‘சொந்த ஊர் அணிக்காக விளையாட இருப்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.