2016ம் ஆண்டுகளில் உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான உயரதிகாரிகளுக்கான உயர்மட்டச் செயலமர்வு!

 

 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 

அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பாக உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் உயர்மட்டச் செயலமர்வு நேற்று நிந்தவூர் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இடம் பெற்ற இச்செயலமர்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 

ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டிலான இச்செயலமர்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றக் கணக்காளர் ஏ.உதயராஜன், ஆசியாமன்ற சிரேஷ்ட ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எஸ்.சசிதரன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் செயலாளர்கள், கணக்காளர்கள், நிதிப்பிரிவு முகாமைத்துவ உதவியாளர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

 

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகின்ற போது பொது மக்கள் எந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றார்களோ அந்த விடயங்களுக்கு முன்னுருமை வழங்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

IMG_9062_Fotor_Collage_Fotor