இலங்கை-துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு !

 

ஜெம்சாத் இக்பால்

 

இலங்கை-துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இலங்கை-துருக்கி பாராளுமன்ற நட்புறச் சங்கத்க் கூட்டத்திலேயே அமைச்சர் ஹக்கீம் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

_DSC0503_Fotor

இந் நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் டுங்கா ஒட்சுஹாதர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்போது துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்ட கால தொடர்பு பற்றி விளக்கிக்கூறிய, அவர் செவ்வாய்க்கிழமையிலிருந்து துருக்கிய விசாவிற்கு இலங்கையர்கள் இணையத்தினூடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

 

பிரதித்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், மற்றும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

தம்மை தலைவராக செய்தமைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் உதுமானிய பேரரசின் கீழ் துருக்கி இஸ்லாமிய உலகில் வகித்த செல்வாக்கை சிலாகித்துக் கூறியதோடு நவீன தொழிநுட்பத் துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள அந் நாட்டின் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தோடு முக்கிய உடன்படிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இதில் துருக்கி தூதரக மூன்றாவது செயலாளர் டம்லா சீலிக்கும் பங்குபற்றினார்.

_DSC0524_Fotor