இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார்.
இதேவேளை, அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரச உயர்திகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.