ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறியதாக பசில் மீது குற்றச்சாட்டு !

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

basil

திவிநெகும நிதியில் 29 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்கள் மத்தியில் இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 பசில் ராஜபக்ஷவுடன், திவிநெகும நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஆர். கே. ரணவக்கவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கையூட்டல்களை வழங்கி வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. திவிநெகும நிதியம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.