சமூகப் பாடசாலைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றது !
சபூர் ஆதம்
தற்போது சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வேலை நிமித்தம் காரணமாக பிள்ளைகளுடன் வசித்துவரும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்தி வருகின்றனர்.. றியாத், மற்றும் ஜித்தா போன்ற பிரதேசங்களில், இலங்கை தூதரக பாடசாலை இருப்பதைப் போன்று தம்மாம் பிரதேசத்திலும் ஒரு பாடசாலை வாராதா என்ற ஏக்கப் பெருமூச்சி விட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்காக ஒரு சில நலன்விரும்பிகள் முன் வந்து இதற்கான வேளைத் திட்டங்களை பல கட்டங்களாக முன்னெடுத்துச் சென்றனர்.
அதன் ஒரு கட்டமாக கடந்த 2015 ஏப்ரல் 10ம் திகதி, தம்மாமிலுள்ள ஐந்து நட்ச்சத்திர ஹொட்டலில் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெற்றோர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, பெற்றோரினால் வாக்களிப்பின் ஊடாக சிலர் தெரிவுசெய்யப்பட்டனர். இத்தேர்தல் முழுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளின் மேற்பார்வையினூடாகவே நடாத்தப்பட்டு. தெரிவு செய்யப்பட்டவர்ளும் மற்றும் தூதரகத்தினால் சிபாரிசு செய்யப்பட்டவர்களும் சமூகப் பாடசாலையை ஆரம்பிக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க ஒரு அதிகாரமுள்ள குழுவாக பிரகடனப்படுத்தப் பட்டது.
பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட இக்குழுவானது அன்றிலிருந்து பாடசாலைக்கான வேலைத் திட்டங்களை அதி பிரயத்தனத்துடன் செய்து கொண்டு வருக்கின்றது. சவூதி அரேபியாவின் இறுக்கமான சட்டத்திட்டங்களுக்கு மத்தியில் பாடசாலைக்கான அனுமதிப் பத்திரத்தினை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல என்பதை இக்குழு நன்றாகவே அறிந்திருந்த போதும்; தம்மாம் பிரதேச கல்வி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து அவர்களால் முடியுமான உதவிகளை பெற்றுக் கொண்டு செயற்பட்டதுடன், தம்மாம் கல்வி அமைச்சிக் காரியாலயத்தினால் முடியாமல் போன விடங்களை, ரியாத் நகரத்திலுள்ள கல்வி அமைச்சினை தொடர்பு கொள்ள பல வழிகளைக் கையாண்டு, ஒரு சில முயற்சிகளில் தோல்வியடைந்த போதும் இக்குழுவின் அயராத முயற்சிகளின் ஊடாகவும் இறைவனின் உதவியூடாகவும். இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் ஒரு சிலரின் சிபாரிசுகளை தேடிப் பெற்று ரியாத் நகரின் கல்வி அமைச்சினை அணுகி இலங்கையர்களுக்கான பாடசாலையின் தேவையின் கட்டாயத்தினை எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவினைத் திரட்டிக் கொண்டது. இதற்காக இக்குழு கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானது என்பதை ஒரு தரம் நாபகப்படுத்த விரும்புகின்றோம்.
அண்மையில்(2015/12/04), புதிதாக இங்கு வருகை வந்திருந்த இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அஸ்மி தாஸிம் அவர்களை வரவேற்ற பாடசாலை ஏற்பாட்டுகுழுவினர் பாடசாலைக்கான கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட செயற்திட்டங்கள், மற்றும் எதிர் வரும் நாட்களில் தூதரகத்தின் பங்களிப்பின் அவசியம் பற்றி விரிவான கலந்துறையாடல் ஒன்றினை நடாத்தினர். இவைகளை கேட்டறிந்த தூதுவர் இக்குழுவினரின் செயற்பாடுகளைக் கண்டு பிரமித்ததோடு, மிகவும் பாராட்டி உற்சாகமூட்டி “இப்படி ஒரு செயற்திறன்மிக்க ஒரு குழுவினரைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்”: எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று(2015,12.13) சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சினால் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்காக பாடுபட்ட அனைவருடைய முயற்சியை இறைவன் ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்.
இப்பாடசாலையை வெற்றிகரமாக ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இப்பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. ஆகவே பெற்றோர்கள் மற்றும் இத்துறை சம்மந்தமான அனுபவம் உள்ளவர்கள், தங்களால் முடியுமான உதவிகளையும், ஆலோசனைகளையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.