கடும் எதிர்ப்பை அடுத்து ஒன்ட்ரைவ் இலவச 15 ஜி.பி. சேமிப்பு வசதியை திரும்ப அளித்தது மைக்ரோசாப்ட் !

மைக்ரோசாப்டின் ஆபிஸ்365 சந்தாதாரர்களாக இருப்பவர்கள் அந்த நிறுவனத்தின் ஒண்ட்ரைவ் வசதியை பயன்படுத்தி க்ளவுட் கம்பியூட்டிங் முறையில் முக்கிய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்களை இலவசமாக சேமித்துவைக்க முடியும். அதுவும் எவ்வளவு வேண்டுமானாலும்.

onedrive

ஆனால், இந்த அன்லிமிட்டெட் சேமிப்பு வசதியை சில வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்தி திரைப்படங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை 75 டி.பி அளவுக்கு சேமித்துவைத்துள்ளதால், கடந்த மதம் ஒன்ட்ரைவ் அன்லிமிட்டெட் சேமிப்பு வசதியை நிறுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதேபோல் இலவச ஒன்ட்ரைவ் சேமிப்பு அளவானது 15ஜி.பி-யில் இருந்து 5ஜி.பி.-யாக குறைக்கப்பட்டது. 

ஆனால் மைக்ரோசாப்ட்டின் இந்த முடிவு, அந்த நிறுவனத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஒன்ட்ரைவ் வாடிகையாளர்கள் பக்கத்தில், சில வாடிகையாளர்கள் ஒன்று சேர்ந்து “எங்கள் சேமிப்பை திருப்பி கொடு” என்று கோரிகையை முன்வைத்தனர். இதற்கு 72 ஆயிரம் பேரின் ஆதரவு கிடைத்ததால் மிரண்டு போனது மைக்ரோசாப்ட். 

5ஜி.பி.-யாக குறைக்கப்பட்ட இலவச ஒன்ட்ரைவ் சேமிப்பு அளவானது மீண்டும் 15ஜி.பி-யாக அதிகரித்துள்ளது மைக்ரோசாப்ட். இந்த இலவச 15 ஜி.பி. வசதியை மீண்டும் பெற 2016 ஜனவரி 31-ம் தேதிக்குள், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்று பதிவு செய்யவேண்டும். போனஸாக, கேமிரா ரோலுக்கு 15 ஜி.பி. தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பும் கேட்டுள்ள மைக்ரோசாப்ட். ஒன்ட்ரைவ் அன்லிமிட்டெட் சேமிப்பு வசதியை நிறுத்திய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.