அட்டாளைச்சேனை வைத்தியசாலை 5 கோடி நிதியின் மூலம் பாரிய அபிவிருத்தி!

அபு அலா –

 

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசின் உதவியுடன் 5 கோடி ரூபா நிதியின் மூலம் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

ad_Fotor

சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சின் பொறியிலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் (13) அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகளை பார்வையிட்டதன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து கட்டிடங்களை அமைத்து தருவது பெரியவிடயமல்ல. அந்த கட்டிடங்களை சிறந்த முறையில் சுத்தமாக பேனிப்பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு வைத்திய பொறுப்பதிகாரி உள்ளிட்ட கடமையிலிருக்கும் அனைவருக்கும் பங்குண்டு.

இந்த வைத்தியசாலையின் நிலைமையை பார்க்கும்போது மிகக் கவலையாகவும் மனவேதனையாகவும் உள்ளது என்றார்.

இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் அமைச்சரின் விஷேட ஆலோசகர் எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

ad4_Fotor ad2_Fotor