அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனத்தின் 45வது வருடாந்த மாநாடு !

அஷ்ரப் ஏ சமத்

SAMSUNG CSC

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் 45வது வருடாந்த மாநாடு இன்று(13) கொழும்பு 7 லக்ஷ்மன் கதிா்காமா் நிலையத்தில்  அதன் தலைவா் எம். ஜ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சபாநயாகா் கரு ஜயசூரிய, பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் மேஜா் ஜெனரல் எஸ். சக்கீல் ஹூசைன், பலஸ்தீனத்துக்கான துாதுவரும் கலந்து கொண்டனா்.  
இந் நிகழ்வில் முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் ஆரம்ப கால உறுப்பிணா்கள் 10 பேரும் பிரதம அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. 

SAMSUNG CSC

அத்துடன் ”உதய கீற்று” எனும்  வருடாந்த இதழ் ஒன்றும உப தலைவா்  எஸ் லுக்மானினால்   வெளியீட்டு வைக்கப்பட்டது.
 மனித நேயன் இர்சாத் .ஏ காதா் .அவா்களின் பவுன்டேசனினால் இரண்டு தையல் மெசின்கள் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவ ஒருவருக்கு புலமைப்பரிசிலும்  அதிதிகள்  ஊடக வழங்கி வைக்கப்பட்டது. 
நாட்டின் உள்ள நாலா பாகத்தில் இருந்தும்   முஸ்லீம் லீக்கின்  கிளை தலைவா்கள் மற்றும் உறுப்பிணா்களும் இந் நிகழ்வில்  கலந்து சிறப்பித்தாா்கள்
அடுத்த நடப்பு ஆண்டிக்கான தலைமைப் பொறுப்பு குருநாகல் மாவட்டத்தினைச் சோந்த டொக்டா் பாருக்கிடம் கையழிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா். மேஜர் சக்கீல் 
தற்காலத்தில் வாழும் முஸ்லீம் சமுகம் பாறியதொரு சவால்களை எதிா்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்றுதான் இலங்கையில் வாழும் முஸ்லீம் சமுகத்தினரும் பல பிரச்சினைகளை முகம் கொடுத்து வாழ்கின்றனா். எனது உயா் ஸ்தாணிகா் அலுவலகத்திற்கு நாளந்தம் பல வாழ்வாதார ப்பிரச்சினையிலும் வறுமைக்கோட்டின் கீழ் முஸ்லீம் சமுகம் இயக்கஙகள் சங்கங்களும் அனுப்பும் மனுக்களில் இருந்து அறிய முடிகின்றது.  நாம் இந்த நாட்டில் ஏனைய சமுகங்களினருடன் ஜக்கியமாக வாழல் வேண்டும். நமது முன்னோா் காட்டிய வழிமுறைகளை தொடா்ந்து நாம் செல்லல் வேண்டும். இந்த முஸ்லீம் லீக் வாலிப முன்னனி கூட ஒரு குடையின் கீழ் ஒன்று சோ்ந்து சமுகம் சாா்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்காக பாடும் படும் ஒரு சமுக நோக்க  இயக்கமாகும்.  இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சமுகத்திற்கு இறுதியாக எஞ்சி இருப்பது கல்வி மட்டும் தான் அதில் உள்ள எதிா்நீச்சல்களை முகம் கொண்டு நாம் முன்னேர தயாரக வேண்டும். 
SAMSUNG CSC
எமது நாட்டின் பாக்கிஸ்தானில் கூட ஒரு முன்மாதிரியான கல்வியை இளைஞா்,பரம்பரையினரை உலகில்  முன்னோக்கிச் செல்ல வழிவகைகளைச் செய்து வருகின்றோம்.  அதன் ஊடகா ஒரு சிறந்த முன்மாதிரியான பாக்கிஸ்தானை உருவாக்கி வருகின்றோம்.   ஆகவே கி.பி. 700 – 800 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனா்.  அகில இலங்கை முஸ்லீம் லீக்கின் ஸ்தாபகா்  பாக்கீா் மாக்காா் போன்ற முன்னைய தலைவா்கள் காட்டிய அடிச்சுவட்டை பின்பற்றி எமது சமுகத்தை கல்வியின்பால் முன்னேற்றுவதற்கும் நாம் தயராக வேண்டும்.  
15_Fotor_Collage_Fotor
 அ.இ.மு.லீ. வா. மு.யும் அதன் 600 கிளைகள்  ஊடாக நமது சமுகத்தின் சிந்தனைகளுக்கும் இளைஞா்கள். கல்விகளுக்கு  வழிகாட்டுதல் வேண்டும். என  உயா் ஸ்தாணிகா் அங்கு தெரிவித்தாா். 
சபாநாயகா் கரு ஜயசுரிய உரையாற்றும் போது.
முன்னாள் சாபநாயகா் எம். ஏ. பாக்கீா் மாா்காகா் அவா்களினால் 1970 களில் அரம்பிக்கப்பட்ட இந்த முஸ்லீம் லீக் வாலிய முன்னணி ஒரு சமுக சேவை, இயக்கமாகும். கடந்த 45 வருடகால மாக இந்த இயக்கத்தின் பணி முன்மாதிரியாகும்.   இவ் அமைப்பு இளைஞா்கள், கல்வி, சமுகம் சாா்ந்த மற்றும் அரசியல் பிரச்சினைகள்  வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமுகத்திற்கும் தம்மால் இயன்ற  உதபிகளைச் செய்து  வருகின்றது.   கடந்த 45 வருடங்களாக நாட்டின் 600 கிளைகள் ஊடாக ஒரு குடையின் கீழ் இயங்குகின்றது.   பிரதேச மக்கள் சாா்ந்த பிரச்சினைகளை இனம் கண்டு அதனை வழிப்படுத்தும் சேவைகளையும்  செய்து வருகின்றது.  இந்த நாட்டில் வாழும் சகல சமுகத்தினரும் இன ஜக்கியத்தை  ஏற்படுத்த வாலி பமு ன்னணி செயல்பட்டு வருவருவதையிட்டு இவ் இயக்கத்தின் பணிகளுக்கு பாரட்டுவதாகவும்   சபாநாயகா் கரு ஜயசூரிய இங்கு தெரிவித்தாா்.