2வது கிழக்கு மாகாண சபையின் 4 வது வருட (2016) ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்!

அபு அலா –

2 வது கிழக்கு மாகாண சபையின் 4 வது வருட (2016) ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடர்க்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (13) தெரிவித்தார்.

naseer

அமைச்சர் மேலும் கூறுகையில்,

சுகாதார அமைச்சுக்கான வரவு செலவுத்திட்டம் 23 ஆம் திகதி புதன்கிழமை முன்வைக்கப்படவுள்ளதாகவும், அன்றைய வரவு செலவுத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களில் காணப்படும் பின்தங்கிய பிரதேசத்தில் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும், இதன் மூலம் மூவின மக்களும் சிறந்ததொரு சுகாதார சேவையினை பெற்றுக்கொள்வதற்கான நிதி பங்கீடு தொடர்பான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் சுகாதார அமைச்சராக இருந்து பாராளுமன்றம் சென்ற முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் முன்னெடுத்து விட்டுச்சென்ற சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.