மசகு எண்ணெய்யை உள்நாட்டில் தயாரித்து அதிக வருமானங்களை ஈட்டித்தரக்கூடிய வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் கூறினார்.
இன்று பாராளுமன்றில் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் பேதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மசகு எண்ணெய் தயாரிப்பை விரைவில் ஆரம்பிப்பதாகவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வீரக்கொடி தெரிவித்தார்.