காத்தான்குடி நிஷவ்ஸ்யின் புது மொழிகள் !

அகத்தின் அழகு முக நூலில் தெரியும்.

அழுத பிள்ளை போண் பார்க்கும்.

வேளையறியாமல் கோலை எடுக்காதே.

Fbயில் போட்டாலும் எண்ணிப் போடு.

எலி போல் இருந்தாலும் தனி போண் வேண்டும்.

கைபேசியை நம்பினோர் கரண்ட் போகப் ‘படார்’.

நொக்கியாவை மெச்சுவார் பொக்கை வாயர்.

காக்கைக்கும் தன் போண் பொன் போண்.

பெயர் ஐடி அழ பேக் ஐடி சிரிக்கும்.

பெண்ணென்றால் பேய்க்கும் request வரும்.

‘சாது’ குரைத்தால் ‘கோடு’ ஏறுவார்.

பழகப் பழக பொலநறுவையும் புளிக்கும்.

உள்ளத்தால் உயர்ந்தவரை
வெள்ளத்தில் காணலாம்.

kattankudy nisaow

(காத்தான்குடி நிஷவ்ஸ் -12/12/2015)