திரு­கோ­ண­மலை, ஒலுவில், காங்­கே­சன்­துறை ஆகி­ய­வற்றை இலா­ப­மீட்டும் துறைமுகங்­க­ளாக மேம்­ப­டுத்­த­வுள்ளோம் !

துறை­முகத் துறையில் இடம்­பெற்­றுள்ள மோச­டி­யால் 225 பில்­லியன் ரூபா கடன் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக துறை­முகப் கப்­பற்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

arjuna

நிலக்­கரி கொண்டு செல்­வ­தற்­காக இரு கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­துள்­ள­மையால் நாளாந்தம் 13 ஆயிரம் டொலர் நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கடற்­றொழில் நீரியல் வளத்­துறை போக்­கு­வ­ரத்து சிவில் விமானம் மற்றும் கப்­பற்துறை அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

2020 ஆம் ஆண்­டாகும் போது கொள்­கலன் ஏற்றி இறக்கும் மத்­திய நிலை­ய­மாக இலங்­கையை மாற்­று­வ­தையே பிர­தான இலக்­காக கொண்­டுள்ளேன். அத்­துடன் துறை­முக கப்­பற்­துறை அமைச்சின் கீழ் உள்ள மோச­டி­களை முற்­றாக ஒழிப்­ப­தோடு இவ் அமைச்சில் காணப்­படும் அர­சியல் ரீதி­யான கலா­சா­ரத்­தையும் மாற்­றி­ய­மைக்­க­வுள்ளோம்.

கடந்த கால ஆட்­சியில் சீன நிறு­வ­னத்­துடன் துறை­முக அதி­கார சபை மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கை­யினால் 15 சத­வீ­த­மான இலா­பமே கிடைக்­கின்­றது.

இந்த ஆண்டின் ஜன­வரி முதல் ஒக்­டோபர் 31 ஆம் திகதி வரை துறை­முக அதி­கார சபை 32, 232 மில்­லியன் ரூபா வரு­மா­னத்தை ஈட்­டி­யுள்­ளது. 23.3 மில்­லியன் ரூபா கொழும்பு துறை­மு­கத்தின் ஊடாக ஈட்­டப்­பட்­டுள்­ளது.

இதில் 1.7 மில்­லியன் ரூபா கடந்த ஜன­வரி முதல் ஒக்­டோபர் வரை அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு செல­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் முதலாம் கட்ட ஆரம்ப நிகழ்­வுக்­காக 113 மல்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி தலை­மையில் பாரிய நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்­நி­லையில் எமது ஆட்­சியில் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வை செய்­தி­ருந்தோம். அதற்கு 10 ஆயிரம் ரூபா­வுக்கு குறை­வான தொகையே செல­விட்டோம்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கம்­ப­னி­க­ளுக்கு எரி­பொருள் விநி­யோ­கிப்­ப­தற்­காக களஞ்­சிய வச­திகள் காணப்­ப­டு­கின்­ற­போதும் எவ்­வி­த­மான இலா­பமும் கிடைக்­க­வில்லை.

மேலும் எரி­பொருள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 24 மில்­லியன் டொலர் கடன் பெறப்­பட்­டுள்­ளது. அதில் 819.76 மில்­லியன் டொலர் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­முக திட்­டத்­திற்­காக காணி சுவீ­க­ரிப்பு உரிய முறையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. சுவீ­க­ரிப்பு செய்­யப்­பட்ட காணி­க­ளுக்­கான இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்கு 2 பில்­லியன் ரூபா தேவைப்­ப­டு­கின்­றது.

செப்­டெம்பர் 31 ஆம் திக­தி­யாகும் போது 225 மில்­லி­ய­னாக நாம் செலுத்த வேண்­டிய கடன் தொகை உயர்­வ­டைந்­துள்­ளது. திரு­கோ­ண­மலை, ஒலுவில், காங்­கே­சன்­துறை ஆகி­ய­வற்றை இலா­ப­மீட்டும் துறைமுகங்­க­ளாக மேம்­ப­டுத்­த­வுள்ளோம்.

அத்­துடன் 10 ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­திற்­காக இளைஞர், யுவ­திகள் துறை­முகத் துறையில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தேர்தல் காலத்தில் அர­சியல் நோக்கத்திற்காகவே பணியில் அமர்த்தப்பட்டு ள்ளனர்.

இவர்கள் தவறான முறையில் சேவையில் உள்வாங்கப்பட்டாலும் அவர்களை நாம் பணி நீக்கம் செய்யப்போவதில்லை.

அவர்களுக்காக உரிய பொறி முறைகளை வகுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படு த்தவுள்ளோம். நாம் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க முயலவில்லை என்றார்.