யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் கல்வி சீரழிந்துள்ளது : அமைச்சர் தண்டாயுதபாணி !

ஜவ்பர்கான்
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அதற்கான பிரதான காரணம் யுத்தமாகும்.அத்தகைய பாதிப்புகளை நிறைவு செய்ய நாம் அனைவரும் ஒன்றுபட்டு கல்வித்துறையை எழுச்சிபெறச்செய்யவேண்டும் இவ்வாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாளுதபாணி தெரிவித்ததர்.

S3010017_Fotor
இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மகாண முன்பள்ளிகளுக்கான மினி ஒலி பெக்கி சாதனங்களை கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாய்யக் கலந்து கொண்டு பேசும்போதே இதனை தெரிவித்ததர்.

 
கிழக்கு மாகாணத்திலுள்ள 225 முன்பள்ளிகளுக்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் இவ் மினிஒலி பெருக்கிசாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 71 முன்பள்ளிகளுக்கு இக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாகாண விவசாய அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.