எல் நினோ தாக்கத்தால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு – பிப்ரவரி வரை நீடிக்கும்: ஐ.நா. தகவல் !

என் நினோ தாக்கம் காரணமாக தென் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழைப்பொழிவு காணப்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

‘எல் நினோ’ எனப்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு காரணமாக கனமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தற்போது ஆசியா மற்றும் பிசிபிக் கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள எல் நினோவின் தாக்கம் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. 

a79e230c-43f5-4d33-84aa-23f480814607_S_secvpf

அதில், “எல் நினோ 2016-ம் ஆண்டு தொடக்கம் வரையில் நீடிக்கும். இதன் தாக்கம் மத்திய பகுதிகளில் கடுமையாகலாம். கம்போடியா, மத்திய மற்றும் தென் இந்தியா, கிழக்கு இந்தோனேஷியா, மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய மற்றும் வடகிழக்கு தாய்லாந்து, இலங்கை ஆகிய பகுதிகள் மழை மற்றும் வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும். 

சில பசிபிக் தீவுகளான பபுவா நியூ கினியா, திமோர்-லேஸ்டே, வானுவாட் உள்ளிட்டவற்றில் வறட்சி காணப்படும், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உணவின்மைக்கு காரணமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியை விட அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில், பிப்ரவரி வரை மழை நீடித்தால் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.