கேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 10 பேர் பலி !

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நைஜீரியாவைத் தாண்டி கேமரூனிலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இன்று கேமரூனில் அவர்கள் தாக்கிய கண்மூடித்தனமான மனித வெடிகுண்டு தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

18b1b0e5ebc84be6befa26d3f3d5b0e1_18
நைஜீரியா நாட்டின் எல்லையருகில் உள்ள நாடு கேமரூன். ஜைநீரியாவில் இருந்து 13 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது கேமரூனின் கோலோபடா என்ற நகரம். இந்த நகரில் இன்று உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.15 அணிக்கு மனித வெடிகுண்டு தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

படுகாயம் அடைந்த 10 பெண்கள் கோலோபடாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மரோவுவாவில் உள்ள சலாக் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மற்றொரு மனித வெடிகுண்டு நபர் தான் கட்டி வைத்திருந்த குண்டு வெடிக்கச் செய்யும்போது சரியாக வேலை செய்யாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

096067-01-02
கடந்த மூன்று மாதங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் கோலோபடாவில் இரண்டாவது முறையான தாக்குதல் இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் 13-ந்தேதி இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.