நாக்பூரில் தொடங்கி கொல்கத்தாவில் முடிகிறது : 2016 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி !

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி சார்பில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் மார்ச் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச தரநிலையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. மார்ச் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இரண்டு அணிகளுக்கான (9-வது மற்றும் 10-வது இடம்) தகுதிச் சுற்று நடைபெறுகிறது.

ICC-T20-World-Cup-2016-Song

அதன்பின் 15-ந்தேதி லீக் சுற்றுகள் தொடங்கப்படுகிறது. ஏப்ரல் 30-ந்தேதி முதல் அரையிறுதிப் போட்டியும், 31-ந்தேதி 2-வது அரையிறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது.

லீக் போட்டிகள் விவரம்:-

மார்ச் 15 (செவ்வாய்க்கிழமை)- இந்தியா- நியூசிலாந்து (நாக்பூர்)
மார்ச் 16 (புதன்கிழமை)- வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து (மும்பை), பாகிஸ்தான்- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (கொல்கத்தா)
மார்ச் 17 (வியாழன்கிழமை)- இலங்கை- ‘பி’ பிரிவு தகுதி அணி (கொல்கத்தா)
மார்ச் 18 (வெள்ளிக்கிழமை)- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து (தர்மசாலா), தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து (மும்பை)
மார்ச் 19 (சனிக்கிழமை)- இந்தியா- பாகிஸ்தான் (தர்மசாலா)
மார்ச் 20 (ஞாயிற்றுக்கிழமை) -தென்ஆப்பிரிக்கா- ‘பி’ பிரிவு தகுதி அணி (மும்பை), இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் (பெங்களூரு)
மார்ச் 21 (திங்கட்கிழமை) – ஆஸ்திரேலியா- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (பெங்களூரு)
மார்ச் 22 (செவ்வாய்க்கிழமை)- நியூசிலாந்து- பாகிஸ்தான் (மொகாலி)
மார்ச் 23 (புதன்கிழமை)- இங்கிலாந்து- ‘பி’ பிரிவு தகுதி அணி (புதுடெல்லி), இந்தியா- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (பெங்களூரு)
மார்ச் 24- ஓய்வு நாள்
மார்ச் 25- (வெள்ளிக்கிழமை)- பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா (மொகாலி), தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் (நாக்பூர்)
மார்ச் 26- (சனிக்கிழமை) நியூசிலாந்து- ‘ஏ’ பிரிவு தகுதி அணி (கொல்கத்தா), இங்கிலாந்து- இலங்கை (புதுடெல்லி)
மார்ச் 27 (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா- ஆஸ்திரேலியா (மொகாலி), ‘பி’ பிரிவு தகுதி அணி- வெஸ்ட் இண்டீஸ் (நாக்பூர்)
மார்ச் 28 (திங்கட்கிழமை) தென்ஆப்பிரிக்கா- இலங்கை (புதுடெல்லி)
மார்ச் 29- ஓய்வு நாள்
மார்ச் 30- (புதன்கிழமை) முதல் அரையிறுதி குரூப் ‘ஏ’-2 vs குரூப் ‘பி’-1 (புதுடெல்லி)
மார்ச் 31- (வியாழக்கிழமை) 2-வது அரையிறுதி குரூப் ‘பி’-2 vs குரூப் ‘ஏ’-1 (மும்பை)
ஏப்ரல் 1 ஓய்வு நாள்
ஏப்ரல் 2 ஓய்வு நாள்
ஏப்ரல் 3 (திங்கட்கிழமை) இறுதிப்போட்டி (இடம்: கொல்கத்தா)