சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தற்போது அந்த கொலை குறித்த முக்கிய விடயங்களை மூடிமறைத்த அதிகாரிகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த ஜயந்த விக்கிரமரட்ண மற்றுமம பிரதிபொலிஸ் மாஅதிபராக விளங்கிய பிரசன்ன நாணயக்கார இருவரையும் குற்றப்புலனாய்லு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
லசந்தபடுகொலை குறித்து உயர்மட்டத்தில் இடம்பெற்ற மூடிமறைப்புகள் குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்,அதேவேளை கொலை இடம்பெற்ற பகுதிக்கு பொறுப்பாக காணப்பட்ட பிரசன்ன நாணயக்காரவும் விசாரிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளளர்.
இருவராலும் லசந்தகொலையாளிகளை அவ்வேளை கைதுசெய்யமுடியாமல் போனமை தெளிவாக தெரிந்த விடயம்,அவ்வேளை அவர்கள் தங்களிற்கு கீழ் பணிபுரிந்த அதிகாரிகளிற்கு வழங்கி உத்தரவுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன எனபொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
விசாரணைகள் புதிய கோணத்தைநோக்கி திரும்பியுள்ளன,தற்போது மூடிமறைப்பதில் ஈடுபட்டவர்கள் குறித்துகவனம் செலுத்துகின்றோம்,அதுவும் ஓரு குற்றச்செயலே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.