சவுதி அரேபியாவில் குடும்பப் பெண் மரணம்!

அசாஹீம் 

 

தனது குடும்பத்தின் வறுமை காரணமாக சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு பணிப்பெண்னாகச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா கிராம சேவகர் பிரிவில் புவுணு வீதியில் வசித்து வந்த ராஜ்மோகன் ஜெனிட்டா (29) என்ற குடும்பப் பெண் சவுதி றியாதில் மரணமடைந்துள்ளதாக அவரது கணவரான சிவலிங்கம் சிவகுமர் தெரிவித்தார்.

மரணித்த ஜெனீட்டாவின் பெற்றோருடன் கணவரும் மகளும்_Fotor

இச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் அறியவருவதாவது.

ராஜ்மோகன் ஜெனீட்டா (வயது – 29) எனும் ஒரு பிள்ளையின் தாயான எனது மனைவி கடந்த 29.10.2015ம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலமாக சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

 

வெளி நாட்டுக்குச் சென்ற அன்று தொலைபேசியில் தனது குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தான் சவுதி வந்து சேர்ந்து விட்டதாகவும் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கதைப்பதாகவும் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

 

29.10.2015ம் திகதி இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்னாக சென்றவர் 26.11.2015ம் திகதி மரணமடைந்து விட்டார் என்று சவுதியில் இருக்கும் ஜெனீட்டாவின் சகோதரரான ஜெயரூபன் தொலைபேசியில் தெரிவித்ததன் பின்னர்தான் ஜெனீட்டா மரணித்த செய்தி எங்களுக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

எனக்கு ஐந்து பிள்ளைகள் அதில் மரணமடைந்த ஜெனீட்டா மற்றுமே பெண் பிள்ளை எனக்கிருந்த ஒரே ஒரு பெண் பிள்ளையையும் இழந்து அவரது மரணச்சடங்கினை நடத்த முடியாமல் தவிக்கிறேன் என்று ஜெனீட்டாவின் தந்தை வேதநாயகம் ராஜ்மோகன் (வயது – 53) குறிப்பிட்டார்.