எவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதியிடம் தான் கப்பம் கோரியதாக கூறப்படுவது பொய், அவ்வாறு கோரியிருப்பின் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எவன்காட் தலைவரிடம் பணம் பெற்ற ஊடகவியலாளர்கள் குறித்த பட்டியலை விரைவில் வௌியிடவுள்ளதாக கூறினார்.
இவ்வாறு பணம் பெற்றுக் கொண்ட காசோலை இலக்கங்கள் கூட தற்போது தெரியவந்துள்ளதாக ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.