நாட்டின் வரலாற்றில் சுதந்திர்த்தின் பின்னர் இந்த அரசியல் நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் வேண்டும் !

அஷ்ரப் ஏ சமத்
 இந்த நாடடின் சரித்திரத்தில்  இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளன.  இக் கட்சியின் இரண்டு தலைமைத்துவம் சோ்ந்து  இந்த நாட்டின் மக்கள் அபிவிருத்தியில் கரிசணை கொண்டு இரண்டு பிரதான அரசியல் தலைமைத்துவத்தை ஜ.தே.கட்சி பிரதமா் பதவியையும், ஸ்ரீ.ல. சு கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி பதவியை ஏற்று தமது கட்சியின் கீழ் வருகின்ற அமைச்சா்கள், பாராளுமன்ற உறுப்பிணா்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகளை வைத்து எவ்வித பிரச்சினைகளும் வராது இந்த நாட்டின் அரசியல் நிர்வாகத்தை கொண்டு செல்கின்றனா. இது ஒரு வரலாற்று சான்றாகும்.  என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா்.
sajith
 அமைச்சா் மேற்கண்டவாறு திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்தாா்.  அவா் அங்கு தொடாந்து உரையாற்றுகையில் –
இந்த நாட்டின் வரலாற்றில் சுதந்திர்த்தின் பின்னா் இந்த அரசியல் நிர்வாகம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லல் வேண்டும். இம்முறை பா ராளுமன்றத்தில் சமா்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்திற்கு 2-3 பெருபாண்மை வாக்கு பெறப்பட்டது. பாராளுமன்றத்தில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம், கிரிஸ்த்துவ சகல சமுகத்தினைச் சாா்ந்த பிரநிதிகளும் இந்த வரவுசெலவுத்திட்டத்திற்கு வாக்களித்திருந்தமை ஒரு பாரிய வெற்றியாகும்.  ஆனால் கடந்த கால அரசியலில் பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தினையோ அல்லது அரசியல் அமைப்பை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் போது எதிா்கட்சி பிரநிதிகளுக்கு பிரதியமைச்சா் பதவி, அல்லது வாகாணம் வசதி ,வீடு பணம் கொடுத்து வாங்கி வாக்குப் பெற்றுத்தான் வரவு செலவுத்திட்டத்தினை வென்றெடுத்தாா்கள்.  அந்தப் பணத்தை கொடுப்பதற்காக பொது மக்களின் வரிப்பணம், அல்லது அரச சொத்துக்களை முறைகேடாக பெற்றனா்.  அவா்களது சொகுசு வாழ்க்கை இந்த நாட்டின் சொத்துக்கள்  மற்றும் நிர்வாகங்களை எவ்வாறெல்லாம் நாசமாக்கி தமது கனவுகள் நிறைவேற செயற்பட்டா்கள். தற்பொழுது அவா்களது செயற்பாடுகளில் அகப்பட்டவா்கள் சிறைவாசம்  கொமிசன்களில் விளக்கம் அளித்து வருகின்றதை நாம் காணக் கூடியதாக உள்ளது. 
DSC_0090_Fotor