கிழக்கு மாகாண முதலைமைச்சருக்கும் ஆசிய மன்ற அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட சந்திப்பு !

அஷ்ரப் ஏ சமத்

 

 ஆசிய மன்றத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலைமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கு இடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

111_Fotor

இதன் போது ஆசிய மன்றத்தினால் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும்; 3 வருடங்களுக்கு செயற்படுத்தப்படவுள்ள புதிய செயற்றிட்டங்கள்; குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது எதிர்கால  திட்டங்களுக்கு முதலமைச்சரின் ஆலோசனைகளும் பெறப்பட்டது.

SAMSUNG CSC

மேலும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவான கிழக்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற  உள்ளுராட்சி வள நிலையங்களை மேலும் வலுப்படுததுவதற்காக இதன் போது இனக்கம் காணப்பட்டது.

அத்துடன் முதலைமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கில் உள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களினதும் நிதி, முகாமைத்துவம் மற்றும் நிர்வாக கட்மைப்பை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பாக உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கவும்  மேற்கொண்டு இணக்கம் காணப்பட்டது.

கிழக்கு மாகாண சட்டப்பிரிவை மேலும் விருத்தி செய்து சகல வசதிகளையும் கொண்ட பலம் பொருந்திய சட்டப்பிரிவாக மாற்றுவதற்கும் உதவுமாறு ஆசிய மன்ற பிரதிநிதிகளிடம் முதலைமைச்சர் வேண்டிக்கொண்டார்.

SAMSUNG CSC

இந்த நிகழ்வில் ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி, பிரதிப்பணிப்பாளர் ஏ.சுபாகரன், ஆசிய மன்றதின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.வலீத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. ஜவாத் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.