பி.எம்.எம்.ஏ.காதர்
உள்ளுராட்சி மன்றங்களால் வரவு செலவு திட்டம் தயாரிக்கின்ற பொழுது மக்கள் எந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்பாக்கின்றார்களோ அந்த விடயங்களை ஆராய்ந்து அதில் உள்ளுராட்ச்சி மன்றங்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்;சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.
ஆசியா மன்றத்தின் எற்பாட்டில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகத்ர்களுக்கான செலமர்வு திங்கள்கிழமை(07-12-2015)நிந்தவூர் பிரதேச சபைக் கட்டத்தில் நடைபெற்றது இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செயலமர்வில் உள்ளராட்சி மன்றங்களில் கடமையாற்றும் செயலாளர்கள்,கணக்காளர்கள், நிதிப்பிரிவின் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.இங்கு உள்ளுராட்ச்சி ஆணையாளர் எம்.வை.சலீம் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- மக்கள் பங்ளிபபுடன் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்கின்ற கருப்பொருளை வரவேற்று அதற்கான வழிகாட்டல்களை ஆசியா மன்றம் செய்து வருகின்றது.
வரவு செலவுத் தி;ட்டம் தொடர்பான நுட்ப அறிவுகளை தருவதற்கு ஆசியா மன்றம் மாத்திரமன்றி எந்த நிறுவனங்கள் வந்தாலும் இது தொடர்பான அறிவுகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயாரில்லாமல் இருக்கின்றோம்.ஆகவே எதிர்வரும் காலத்தில் இது தொடர்பில் உத்தியோகத்தர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
ஆசியா மன்றத்திற்கு நாங்கள் பெரும் கடன்பட்ட பொறுப்பு இருக்கிறது. 2005ம்,2006ம் ஆண்டுகளில் எல்லாம் நாங்கள் பவப்பொயின்ட் பிரசன்டேசனைச் செய்வதற்கு எங்களிடம் எந்த விதமான அறிவும் இருக்கவில்லை எந்த விதமான தகவல்களும் இருக்கவில்லை.நாங்கள் சில்லறைக் கடையில் கணக்குப்பார்த்து அன்றாடம் செலவு செய்கின்ற நிலைமைதான் இருந்து வந்திருக்கின்றுது.இது உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றி உத்தியோகத்தர்களை குறை சொல்லுகின்ற விடையமல்ல நீண்ட காலமாக பழகிப்போன ஒரு விடையத்தில் நாங்கள் மூழ்கிப்போய்யிருந்தன் காரணமான அவ்வாரான நிலைமையில் நாங்கள் இருந்தோம்.
ஆனால்;,கால ஓட்டம், கால மாற்றம்,உலகலாவிய மாற்றங்களுக்கு தக்கதாக நாங்களும் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டி ஒரு கடப்பாடு அல்லது நிர்ப்பந்தம் நாங்களும் நிலைத்து நிற்க வேண்டுமாக இருந்தால் புதிய நுற்பங்கள் புதிய வடிங்களில் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்ற அந்த நிலைக்க ஆளாக வேண்டிய நிலையில் எங்களுக்கு கைகோடுக்க வந்த ஒரு நிறுவனம் ஆசியா மன்றமாகும்.அந்த ஆசியா மன்றத்திற்கு உள்ளுராட்சி மன்றங்கள் என்றென்றும் நன்றி கூறவேண்டும்.
எவ்வாறு ஒரு அலுவலகம் இயங்க வேண்டும் அந்த அலுவலகத்தின் செற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பல வகையான நுற்ப அறிவுகளையும்.தொழில் நுற்பம் சார்ந்த விடையங்களையும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். உண்மையில் நாங்கள் வரவு செலவுத் திட்டம் என்று பார்க்கின்றபொழுது கடந்த காலங்களில் எந்த விதமான ஆராய்வுகளையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளாது செயற்பட்டிருக்கின்றோம் என்றார்.
இந்த செயலமர்வில் ஆசியா மண்றத்தின் சிரேஷ்;ட ஆலோசகர் ஏ.சுபாகரன்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்ளத்தின் கணக்காளர் ஏ.உதயராஜன்,நிகழ்ச்சிட்ட அதிகாரி எஸ்.சசீகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும்,அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும், கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்ளத்தின் வழிகாட்டலிலும் அசியா மன்றம் இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.