பாரிசில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பருவநிலை மாறுபாடு குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசியுள்ளார்.
இது தொடர்பான செய்தியை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ஜோஸ் எர்னெஸ்ட் தெரிவித்தார்.
ஜோஸ் எர்னெஸ் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
”பாரிஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தையும் அதிபர் ஒபாமா கூர்ந்து கவனித்து வருகிறார். இந்தியாவிடம் மட்டுமல்லாமல் சீனாவிடமும் நேற்று பிரேசிலிடம் ஒபாமா பேசினார்.
மாநாட்டில் நடைபெறும் கலந்துரையால் குறித்த உலக தலைவர்கள் அனைவருடனும் ஒபாமா தொடர்ந்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.” இவ்வாறு கூறினார்.
முன்னதாக பருவநிலை மாநாட்டையொட்டி கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் பராக் ஒபாமாவும் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.