– மிக வறிய குடும்பங்கள் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்கீடு!

அபு அலா –

சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கும் மிக வறிய குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்காகவேண்டி தனது பன்முகப்படுத்தப்பட்ட இவ்வாண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம்  2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (08) தெரிவித்தார்.

1 (14)

கல்முனை மாநகர பிரதி முதல்வர் முஸ்லிம் முழக்கம் அப்துல் மஜீதின் வேண்டுகோளுக்கமைவாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் மிக வறிய 13 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பினையும், மின்சார இணைப்பினையும் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நிதி ஒதுக்கீட்டினை மிக அவசரமாக ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதாரசுதேச சமூக நலன்புரிபராமரிப்பு, சமுக சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.