இந்தியா-தென்ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.
இதில் தென்ஆபிரிக்க தலைவர் ஹஷிம் அம்லா, 207 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்ககள் (ஸ்டிரைக் ரேட் 11.11) எடுத்துள்ளார். குறைந்தது 200 பந்துகளை சந்தித்து விளையாடிய வீரர்களின் இன்னிங்சில், இது தான் மந்தமான ஆட்டமாகும். இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜாக் ரஸ்செல் 235 பந்துகளில் 29 ஓட்டங்கள் (ஸ்டிரைக் ரேட் 12.34, தென்ஆபிரிக்காவுக்கு எதிராக, 1995-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் மெதுவான துடுப்பாட்டமாக இருந்தது.
அம்லா-டிவில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு இதுவரை 176 பந்துகளை சந்தித்து வெறும் 23 ஓட்டங்கள் (ஓவருக்கு சராசரி ரன் 0.78) மட்டுமே எடுத்துள்ளது. குறைந்தது 175 பந்துகளுக்கு மேல் சந்தித்த இணைப்பாட்டத்தில்(பந்து வாரியாக ஓட்டங்கள் கணக்கிடப்பட்ட காலத்தில் இருந்து) இது தான் ‘நத்தை’ வேக இணைப்பாட்டமாகும். தென்ஆபிரிக்காவின் டிவில்லியர்ஸ்-கைல் அப்போட் இணை கடந்த ஆண்டு அவஞஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 27 ஓட்டங்கள் (ஓவருக்கு சராசரி 0.91 ஓட்டம்) எடுத்ததே முந்தைய மட்டமான இணை ஆட்டமாகும்.
2002-ம் ஆண்டுக்கு பிறகு, டெஸ்ட் இன்னிங்சில் 72 ஓவர்களில் ஓர் அணி எடுத்த குறைந்த பட்ச ஓட்டஎண்ணிக்கை இதுவாகும்.
72 ஓவர்கள் பந்து வீசிய இந்தியா அதில் 43 ஓவர்களில் ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இதன் மூலம் 72 மற்றும் அதற்கு குறைவாக வீசப்பட்ட ஓவர்களில் அதிக ஓட்டமற்ற ஓவர் வீசிய இங்கிலாந்தின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. 1957-ம் ஆண்டு மேற்கிந்தியதீவுக்கு எதிரான 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 60 ஓவர்கள் வீசியதில் அதில் 43 ஓட்டமற்றஓவர்கள் பதிவு செய்திருந்தது