நாசாவின் இந்த ஆண்டுக்கான விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளது புளூட்டோ கிரகம், சில மாதங்களுக்கு முன் புளூட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், அங்குள்ள நிலவுகள் குறித்தும் ஆச்சர்ய தகவல்களை வெளியிட்ட நாசா, தற்போது முதல்முறையாக நியூ ஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுதியை வெளியிட்டுள்ளது.
ஒரு பிக்சலுக்கு 250-250 அடி வரை கொண்ட இந்த புகைப்படங்கள் புளூட்டோ கிரகம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.