நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்து சாதனை !

றியாஸ் ஆதம்
அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்; போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் நஜீப் முஹம்மது டிலாஸ் புதிய நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

dilas (4)_Fotor
இலங்கை விஞ்ஞான முன்னேற்ற அமைப்பின் (SLAAS) 71வது வருட அமர்வு அண்மையில் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதன்போது இளம் கண்டுபிடிப்பாளர்; போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் சான்றுதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

dilas (3)_Fotor
இதன்போது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர் தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் முஹம்மட் டிலாஸ் தனது திறமையின் மூலம் (Modern Cell Viewer) கலங்களை அவதானிக்கும் கருவியினை கண்டு பிடித்து சாதனை படைத்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் சான்றுதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இக்கருவியானது நுணுக்குக்காட்டியை விட உருப்பெரிதாகவும், துள்ளியமாகவும் செயற்பாட்டை வெளிப்படுத்தும் (தாவர, விலங்கு, நுன்னங்கி) கலங்களின் கட்டமைப்பையும் நுண்ணிய பொருட்களையும் இதனூடாக துள்ளியமாய் பார்த்துக்கொள்ள முடியும்.

dilas (2)_Fotor